தொழில்புரிவோர்கள்
…தொழில்புரிவோர்களைக் காட்டுகிறது
…தொழில்புரிவோர்களைக் காட்டுகிறது
முடிவுகளில் தேவைப்படும் உதவி
-
இணையத் தகவல் தொகுதி என்றால் என்ன?
NAATI சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான ஒரு பொது இணையத் தகவல் தொகுதியை NAATI கொண்டுள்ளது. தங்களுக்குப் பணிபுரிய ஒரு சான்றளிக்கப்பட்ட நிபுணரைக் கண்டறிய சமூகத்திற்கு இது முக்கிய வழிகளில் ஒன்றாகும்.
தகவல் தொகுதியில் உள்ள தேடல் முடிவுகள், மிக உயர்ந்த நற்சான்றிதழ் தகுதிகளை முதலில் காட்டுகின்றன, பின்னர் பெயர்கள் சீரற்ற வரிசையில் தோன்றும், இதனால் எந்தவொரு தொழில்புரிவோருக்கும் மற்றவரை விட முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள், தகவல் தொகுதியில் தங்கள் பெயர்கள் இடம்பெற விருப்பம் தெரிவிக்கின்றனர். பட்டியலில் இடம்பெறாத தொழில்புரிவோர்களின் தொடர்பு விவரங்களை NAATI பகிர்வதில்லை.
-
நான் மொழிபெயர்ப்பாளரை அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரை நேரில் சந்திக்க வேண்டுமா?
பல மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள், அதாவது அவர்கள் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் எந்த இடத்திலும் ஒரு மொழிபெயர்ப்பாளரை அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரைத் தேடலாம்.
சில சந்திப்பு ஏற்பாடுகளுக்கு, மொழிபெயர்த்துரைப்பாளர் உங்களுடன் நேரில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். உங்களுக்கு நேருக்கு நேர் ஒருவர் தேவையா என்பது உங்கள் சூழ்நிலை, சேவையின் வகை மற்றும் அதற்கான கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். உங்களுக்கு அருகிலுள்ளவர்களைக் கண்டறிய, NAATI இணையத் தகவல் தொகுதியில் இருந்து தொழில்புரிவோரை இருப்பிடத்தின் அடிப்படையில் நீங்கள் தேடிப்பார்த்துத் தெரிவு செய்யலாம்.
-
எனக்குத் தேவை ஒரு தனிநபரா அல்லது மொழிச் சேவை வழங்குநரா?
அது உங்கள் தேவைகளைப் பொறுத்தது. மேலதிக வழிகாட்டுதலுக்கு, “ஒரு தனிநபர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல்” என்ற எங்கள் கட்டுரையைப் படியுங்கள்.
-
எனது மொழியில் தொழில்புரிபவர்கள் யாரும் இல்லையென்றால் என்ன செய்வது?
NAATI சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் யாரும் கிடைக்கவில்லை என்றால், மொழி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து வேறு தெரிவுகள் இருக்கலாம்.
நடைமுறை வழிகாட்டுதலுக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும், “NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது” என்ற எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.