உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த இணையதளம் நீங்கள் வேண்டுகின்ற மொழியில் காண்பிக்கும்.

விசாரிப்புகள்

ஒரு கேள்வி அல்லது உதவிக்கான கோரிக்கையுடன் NAATI-ஐத் தொடர்புகொள்ள இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.

NAATI மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் சேவைகளை வழங்குவதில்லை. NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரைக் கண்டறிய, தயவுசெய்து எங்கள் இணையத் தகவல் தொகுதியைப் பயன்படுத்தவும்.

NAATI-ஐத் தொடர்புகொள்ளவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

NAATI என்பது மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையம் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசியத் தரநிலைகளை நிர்ணயித்து, அவற்றைத் தொடர்ந்து பேணுவதற்குப் பொறுப்பான ஓர் அமைப்பாகும்.

NAATI தொழில்புரிவோர்களுக்குச் சான்றளிக்கிறது, இதன் மூலம் அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமுதாயம் போன்றவை, இதன்மூலம் வழங்கப்படும் மொழிச் சேவைகள் துல்லியமானவை, தொழில்முறை சார்ந்தவை மற்றும் நெறிமுறையானவை என்று நம்பலாம்.

NAATI என்ன செய்கிறது:
NAATI மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களைச் தேர்வுசெய்து சான்றளிக்கிறது. இது மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தலுக்கான தேசியத் தரநிலைகளை நிர்ணயிக்கிறது, வெளியிடப்படும் சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர்களின் இணையவழி விவரப்பட்டியலைப் பராமரிக்கிறது, மேலும் மொழிச் சேவைத் துறையில் தரம் மற்றும் தொழில்முறைக்கு ஆதரவளிக்கிறது.

NAATI என்ன செய்வதில்லை:
NAATI மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தல் சேவைகளை வழங்குவதில்லை, மொழிபெயர்ப்பாளர்களையோ அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர்களையோ பணியமர்த்துவதில்லை, வேலைகளை ஒதுக்கிக் கொடுப்பதில்லை அல்லது முன்பதிவுகளை ஏற்பதில்லை, அல்லது சேவைகளுக்கான விலைகளையோ அல்லது கட்டணங்களையோ நிர்ணயிப்பதில்லை.

உங்களுக்கு ஒரு ஆவணத்தை மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் அல்லது ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் நேரடியாக NAATI-சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

NAATI சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான ஒரு பொது இணையத் தகவல் தொகுதியை NAATI கொண்டுள்ளது. தங்களுக்குப் பணிபுரிய ஒரு சான்றளிக்கப்பட்ட நிபுணரைக் கண்டறிய சமூகத்திற்கு இது முக்கிய வழிகளில் ஒன்றாகும்.

தகவல் தொகுதியில் உள்ள தேடல் முடிவுகள், மிக உயர்ந்த நற்சான்றிதழ் தகுதிகளை முதலில் காட்டுகின்றன, பின்னர் பெயர்கள் சீரற்ற வரிசையில் தோன்றும், இதனால் எந்தவொரு தொழில்புரிவோருக்கும் மற்றவரை விட முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள், தகவல் தொகுதியில் தங்கள் பெயர்கள் இடம்பெற விருப்பம் தெரிவிக்கின்றனர். பட்டியலில் இடம்பெறாத தொழில்புரிவோர்களின் தொடர்பு விவரங்களை NAATI பகிர்வதில்லை.

இந்தக் கருவி ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் தற்போது NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளாரா என்பதைச் சரிபார்க்கவும், அவர்களின் சான்றிதழ் விவரங்களைக் காணவும் உங்களை அனுமதிக்கிறது.

நீங்கள் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ள தொழில்புரிவோர் தகுதி வாய்ந்தவரா, சான்றளிக்கப்பட்டவரா, மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்கக்கூடியவரா என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அல்லது, நீங்கள் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பு, NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் முடிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்கவும் இது உங்களை அனுமதிக்கிறது.

இந்தப் பக்கம் பயனுள்ளதாக இருந்ததா?(தேவைப்படுகிறது)

உங்கள் பின்னூட்டம் இந்தப் பக்கத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது. எங்கள் இணையதளத்தை மேம்படுத்த NAATI இந்தப் பின்னூட்டத்தைப் பயன்படுத்துகிறது.

உங்களுக்குப் பதில் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களது எங்களைத் தொடர்பு கொள்க படிவத்தைப்

பயன்படுத்தவும்.