உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த இணையதளம் நீங்கள் வேண்டுகின்ற மொழியில் காண்பிக்கும்.

quote-1

ஆதாரவளங்கள்மற்றும் பதிவிறக்கங்கள்

quote-2

ஆதாரவளங்கள் மற்றும் பதிவிறக்கங்கள்


Resource todo

பங்குதாரர் தொகுப்பு மற்றும் பிரச்சார ஆதாரவளங்கள்

மொழி வேறுபாடின்றி, நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் நம்பிக்கையுடன் தங்கள் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அணுகுவதற்கு வலுவூட்டும் வகையில், இந்தத் தொகுப்பில் உள்ள ஆதாரவளங்களைப் பங்குதாரர்கள் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Resource todo

நன்னெறிக் கோட்பாட்டுக்கான விளக்கவுரை

NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் நன்னெறிக் கோட்பாடு மற்றும் நடத்தைக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது கணக்காளர் மீது வைக்கும் நம்பிக்கையைப் போலவே, NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட எந்தவொரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரையும் நம்பலாம்.

Resource todo

பணிக்குச் சரியான தொழில்முறை நிபுணரைத் தேர்ந்தெடுத்தல்: NAATI நற்சான்றிதழ்களின் ஒரு கண்ணோட்டம்

NAATI-இன் சான்றிதழ் வழங்கும் அமைப்பில் மூன்று மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ்களும், ஆறு மொழிபெயர்த்துரைப்பாளர் நற்சான்றிதழ்களும் அடங்கும். ஒவ்வொரு நற்சான்றிதழும் எதற்காகப் பயன்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

Resource todo

ஆஸ்லான் மற்றும் பிற சைகை மொழிகளுக்கான NAATI-இன் நற்சான்றிதழ்கள்

நீங்கள் காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடு உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், நீங்கள் NAATI-சான்றளிக்கப்பட்ட ஆஸ்லான் அல்லது காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளரையோ அல்லது எழுத்து வடிவில் ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லானுக்கு மாற்றும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரையோ ஈடுபடுத்த வேண்டியிருக்கும்.

Resource todo

மொழிபெயர்த்தலுக்காக உங்கள் ஆவணத்தைத் தயார் செய்வது எப்படி

மொழிபெயர்த்தலுக்கு முன் உங்கள் ஆவணத்தை முறையாகத் தயார் செய்வது, மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மிகவும் திறமையாகப் பணியாற்ற உதவுவதோடு, உங்களுக்குத் துல்லியமான, உயர்தரமான மொழிபெயர்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

Resource todo

மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தலுக்கான செலவுகளைப் புரிந்துகொள்ளுதல்

"இந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும்?" என்பதற்கான விடை ஒரே பதிலில் இல்லை. ஒவ்வொரு வேலைக்கான விலை நிர்ணயம் என்பது, வழங்கப்படும் சேவை, தொழில் புரிவோரின் அனுபவம் மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்ததாகும்.

1-6 of 14 results

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

அது உங்கள் தேவைகளைப் பொறுத்தது. மேலதிக வழிகாட்டுதலுக்கு, “ஒரு தனிநபர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல்” என்ற எங்கள் கட்டுரையைப் படியுங்கள்.

பல மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள், அதாவது அவர்கள் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் எந்த இடத்திலும் ஒரு மொழிபெயர்ப்பாளரை அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரைத் தேடலாம்.

சில சந்திப்பு ஏற்பாடுகளுக்கு, மொழிபெயர்த்துரைப்பாளர் உங்களுடன் நேரில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். உங்களுக்கு நேருக்கு நேர் ஒருவர் தேவையா என்பது உங்கள் சூழ்நிலை, சேவையின் வகை மற்றும் அதற்கான கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். உங்களுக்கு அருகிலுள்ளவர்களைக் கண்டறிய, NAATI இணையத் தகவல் தொகுதியில் இருந்து தொழில்புரிவோரை இருப்பிடத்தின் அடிப்படையில் நீங்கள் தேடிப்பார்த்துத் தெரிவு செய்யலாம்.

NAATI சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் யாரும் கிடைக்கவில்லை என்றால், மொழி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து வேறு தெரிவுகள் இருக்கலாம்.

நடைமுறை வழிகாட்டுதலுக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும், “NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது” என்ற எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.

Sort by

இந்தப் பக்கம் பயனுள்ளதாக இருந்ததா?(தேவைப்படுகிறது)

உங்கள் பின்னூட்டம் இந்தப் பக்கத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது. எங்கள் இணையதளத்தை மேம்படுத்த NAATI இந்தப் பின்னூட்டத்தைப் பயன்படுத்துகிறது.

உங்களுக்குப் பதில் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களது எங்களைத் தொடர்பு கொள்க படிவத்தைப்

பயன்படுத்தவும்.