உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த இணையதளம் நீங்கள் வேண்டுகின்ற மொழியில் காண்பிக்கும்.

ஆதாரவளங்களைக் கண்டறியவும்

இங்கே நீங்கள் மொழிபெயர்த்துரைப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மற்றும் மொழிச் சேவைகள் பற்றிய பயனுள்ள தகவல்களைக் காணலாம்.

இந்த ஆதாரவளங்கள், மொழிச் சேவைகளை அனைவரும் எளிதாகப் பயன்படுத்தவும், புரிந்துகொள்ளவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். மொழிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் உரிமைகளையும், என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும் வழிகாட்டிகள் உள்ளன.

quote-1 quote-2

NAATI என்றால் என்ன?

மக்கள் சமூகத்தில் இணைவதற்கும், பங்கேற்பதற்கும் உதவுவதில் மொழிபெயர்ப்பாளர்களும், மொழிபெயர்த்துரைப்பாளர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

NAATI என்பது ஆஸ்திரேலியாவின் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய தரநிலைகள் மற்றும் சான்றளிக்கும் அதிகார அமைப்பாகும். NAATI மொழிபெயர்ப்பாளர்களையோ அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர்களையோ பணியமர்த்துவதில்லை. நீங்கள் ஒருவரைக் கண்டறிய உதவும் வகையில் இந்தக் தகவல் தொகுதிக்கு நாங்கள் நிதியளித்துள்ளோம்.