ஆஸ்லான் மற்றும் பிற சைகை மொழிகளுக்கான NAATI-இன் நற்சான்றிதழ்கள்
நீங்கள் காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடு உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், நீங்கள் NAATI-சான்றளிக்கப்பட்ட ஆஸ்லான் அல்லது காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளரையோ அல்லது எழுத்து வடிவிலான ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லானுக்கு மாற்றும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரையோ ஈடுபடுத்த வேண்டியிருக்கும்.
எத்தனை மொழிபெயர்த்துரைப்பாளர்களை பதிவு செய்வது
உங்கள் நிகழ்வு, சந்திப்பு அல்லது சந்திப்பு ஏற்பாடு போன்றவற்றின் கால அளவு மற்றும் சிக்கலான தன்மையைப் பொறுத்து, நீங்கள் எத்தனை மொழிபெயர்த்துரைப்பாளர்களை பதிவு செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.
ஒரு மணி நேர நேருக்கு நேர் சந்திப்பு ஏற்பாடுகளுக்கு (எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவருடனான ஆலோசனை அல்லது பெற்றோர்-ஆசிரியர் நேர்காணல்), பொதுவாக ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரே பொருத்தமானவர். இருப்பினும், இரண்டுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு (வேலை செய்யுமிடத்தில் நடைபெறும் கூட்டம், இணையவழி ஆய்வரங்கு அல்லது கருத்தரங்கு விளக்கக்காட்சி போன்றவை), நீங்கள் இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்களை பதிவு செய்ய வேண்டியிருக்கலாம். இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்களை பதிவு செய்வது, தகவல் தொடர்பின் தடையற்ற ஓட்டத்திற்கு உதவுகிறது, மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மாறி மாறி மொழிபெயர்த்துரைக்கவும், தேவையான இடைவேளைகளை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறது.
சரியான சான்றிதழைத் தேர்ந்தெடுத்தல்
காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் தகவல் தொடர்புக்கு உதவும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு NAATI பல்வேறு சான்றிதழ்களை வழங்குகிறது. உங்கள் சூழ்நிலை மற்றும் தகவல் தொடர்புத் தேவைகளுக்குப் பொருத்தமான சான்றிதழ் வகையைக் கொண்ட ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பாளரைப் பணியமர்த்துவது முக்கியமாகும்.
NAATI-ஆல் சான்றளிக்கப்படுவதற்கு, மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சான்றிதழ் தேர்வில் கலந்துகொள்ளும் முன்னதாகப் பல்வேறு முன்நிபந்தனைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு நற்சான்றிதழுக்கும் அதற்கே உரிய முன்நிபந்தனைகள் உள்ளன (எடுத்துக்காட்டாக, பயிற்சியின் வெவ்வேறு நிலை தேவைப்படுதல்), ஆனால் அவையனைத்தும் பின்வருவனவற்றுள் அடங்கும்:
- மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தலில் முறையான பயிற்சி
- மொழித் திறன்
- நெறிமுறைத் திறன்: சான்றளிக்கப்பட்ட அனைத்து மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களும் கட்டுப்பட வேண்டிய, தேவையான நன்னெறிக் கோட்பாடு குறித்த அறிவும் புரிதலும்.
- பன்முகக் கலாச்சாரத் திறன்: ஆஸ்திரேலிய சூழலில், கலாச்சாரங்களுக்கு இடையே பணியாற்றத் தேவையான அறிவும் திறனும்.
அங்கீகரிக்கப்பட்டத் தொழில்புரியும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் , NAATI தேர்வுச் சோதனை இல்லாதபோது, குறைந்த தேவை உள்ள சைகை மொழிகளுடன் (நியூசிலாந்து சைகை மொழி மற்றும் அமெரிக்க சைகை மொழிக்கும் ஆஸ்லானுக்கும் இடையேயான காதுகேளாதோருக்கான மொழிபெயர்த்துரைத்தல் போன்றவை) பணியாற்றுகிறார்கள். அவர்களின் திறன்கள் NAATI-ஆல் தேர்வுச் சோதனை செய்யப்படவில்லை, ஆனால் அவர்கள் குறைந்தபட்சப் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளனர், அத்துடன் சமீபத்திய, வழக்கமான மொழிபெயர்த்துரைக்கும் அனுபவத்தையும் கொண்டுள்ளனர்.
சான்றளிக்கப்பட்ட தற்காலிக மொழிபெயர்த்துரைப்பாளர்களின் மொழிபெயர்த்துரைக்கும் திறன்கள், பொதுவாக இரண்டு நபர்களுக்கு இடையேயான, சாதாரண, சிக்கலற்ற உரையாடல்களுக்காகச் தேர்வுச் சோதனை செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அவர்கள் பொது மருத்துவர் சந்திப்பு ஏற்பாடுகள், ஓட்டுநர் தேர்வுகள், பெற்றோர்-ஆசிரியர் நேர்காணல்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் சமூகச் சேவைகள் சந்திப்பு ஏற்பாடுகளுக்கு மொழிபெயர்த்துரைக்கலாம். சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் மட்டத்தில் தேர்வுச் சோதனை செய்யப்படும் பரந்த அளவிலான மொழிபெயர்த்துரைக்கும் திறன்களை NAATI மதிப்பிடாததால், ‘தற்காலிக’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
- நேரடிப் பாத்திரமேற்று நடிப்பவர்களின் உதவியுடன், ஆங்கிலத்திற்கும் ஆஸ்லானுக்கும் இடையேயான நேருக்கு நேர் (அல்லது காணொளி) உரையாடல்களை மொழிபெயர்த்துரைதல்.
- ஒரு தனியுரையை ஆஸ்லானில் மொழிபெயர்த்துரைத்தல் (சமநேர மொழிபெயர்த்துரைத்தல்).
சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் , சுகாதாரம் மற்றும் சட்ட அமைப்புகள் உட்பட பெரும்பாலான சூழ்நிலைகளில் சிக்கலான மொழிபெயர்த்துரைத்தலைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, அவர்கள் சிறப்பு மருத்துவ சந்திப்பு ஏற்பாடுகள், பல்கலைக்கழக விரிவுரைகள், வணிகக் கூட்டங்கள் மற்றும் சட்டம் சார்ந்த சந்திப்பு ஏற்பாடுகளை மொழிபெயர்த்துரைக்கலாம்.
- இரு நபர்களுக்கு இடையேயான உரையாடல்களை மொழிபெயர்த்துரைத்தல்.
- எழுதப்பட்ட ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லானுக்கு ஆவணங்களைப் படித்து மொழிபெயர்த்தல்.
- தனியுரைகளை மொழிபெயர்த்துரைத்தல் (சமநேர மொழிபெயர்த்துரைத்தல்).
சான்றளிக்கப்பட்ட சிறப்பு சுகாதார மொழிபெயர்த்துரைப்பாளர்கள் , சுகாதார அமைப்புகளில் மொழிபெயர்த்துரைப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஆவர். அவர்கள் பொது மருத்துவ அறிவு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் மொழிபெயர்த்துரைப்பாளர்களின் பங்கு பற்றிய மருத்துவ அறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (ஒரு மருத்துவர் மற்றொரு சுகாதார நிபுணரிடம் ஒரு நோயாளி பற்றிப் பேசும் உரையாடல்கள் போன்ற) நிபுணர்களுக்கிடையேயான உரையாடல்களை மொழிபெயர்த்துரைப்பதையும், அத்துடன் மனநலச் சூழல்களில் மொழிபெயர்த்துரைப்பதையும் மதிப்பீடு செய்யும் ஒரு மொழிபெயர்த்துரைத்தல் தேர்விலும் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன்பு, அவர்கள் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைகளாகப் பணியாற்றிச் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.
NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்- சுகாதார அறிவுச் சோதனை
- தனியுரைகளை மொழிபெயர்த்துரைத்தல் (சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
- ஒருமொழிப் பரிமாற்றத்தை மொழிபெயர்த்துரைத்தல் (சிக்கலான சூழலில் பல ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
சான்றளிக்கப்பட்ட சிறப்புச் சட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் என்பவர்கள் சட்டம் சார்ந்த சூழல்களில் மொழிபெயர்த்துரைப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஆவர். அவர்கள் பொதுச் சட்ட அறிவு மற்றும் சட்டம் சார்ந்த சூழல்களில் மொழிபெயர்த்துரைப்பாளர்களின் பங்கு பற்றியச் சட்ட அறிவுத் தேர்வுச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (ஒரு நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் போன்ற) நிபுணர்களுக்கிடையேயான உரையாடல்களையும், நீதிமன்றக் குறுக்கு விசாரணைகளையும் மொழிபெயர்த்துரைப்பதை மதிப்பீடு செய்யும் ஒரு மொழிபெயர்த்துரைத்தல் தேர்விலும் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன்பு, அவர்கள் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைகளாகப் பணியாற்றிச் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.
NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்- சட்ட அறிவுச் சோதனை
- உரையாடல் பகுதிகளைப் பிரித்தெடுக்கும் பணி (உருவகப்படுத்தப்பட்ட குறுக்கு விசாரணைச் சூழலில் தொடர்ச்சியான அல்லது சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
- Interpreting monologues (simultaneous interpreting)
- ஒருமொழிப் பரிமாற்றத்தை மொழிபெயர்த்துரைத்தல் (சிக்கலான சூழலில் பல ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
சான்றளிக்கப்பட்டக் கருத்தரங்கு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் உயர் மட்ட கருத்தரங்கு அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள். எடுத்துக்காட்டாக, காதுகேளாத கல்வியாளர் ஒருவர் வழங்கும் கருத்தரங்குக் கட்டுரையை அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துரைக்கலாம், அல்லது ஆங்கிலம் பேசும் ஆராய்ச்சியாளர் ஒருவர் வழங்கும் கருத்தரங்குக் கட்டுரையை ஆஸ்லான் மொழியில் மொழிபெயர்த்துரைக்கலாம். அவர்களின் நற்சான்றிதழ், மொழியை ஒரு திசையில் மாற்றுவதை மட்டுமே உள்ளடக்கியது (எடுத்துக்காட்டாக, ஆஸ்லானிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லான்), இருப்பினும் சில மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பல மொழிச் சேர்க்கைகளைக் கொண்டுள்ளனர்.
NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்- பார்க்கப்பட்ட மற்றும் பார்க்கப்படாத பேச்சுகளின் தனியுரைகளை மொழிபெயர்த்துரைத்தல் (சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
அங்கீகரிக்கப்பட்ட, தொழில்புரியும் காதுகேளாத மற்றும் பார்வையற்றோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் , காதுகேளாத மற்றும் பார்வையற்றோருடனான தகவல்தொடர்புக்கு உதவுகிறார்கள். அவர்கள் பேசப்பட்ட அல்லது சைகை மொழியில் உள்ள தகவல்களுடன், சுற்றுச்சூழல் விளக்கங்கள், முகபாவனைகள் அல்லது எதிர்வினைகள் போன்ற காட்சித் தகவல்களையும் தெரிவிப்பார்கள். காதுகேளாத மற்றும் பார்வையற்றோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர்கள், தொடுஉணர்வுச் சைகை மொழி, மிக நெருங்கிய சைகை மொழி, காட்சி வரம்பிற்குள் சைகை மொழி, விரல் எழுத்துக்கூட்டல் மற்றும் சமூகத் தொடுகைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்டத் தொழில்புரியும் காதுகேளாத மற்றும் பார்வையற்றோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர்களின் காதுகேளாத மற்றும் பார்வையற்றோருக்கான மொழிபெயர்த்துரைத்தல் திறன்கள் NAATI-ஆல் நேரடியாகச் சோதிக்கப்படவில்லை, ஆனால் அவர்கள் குறைந்தபட்சப் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பார்கள், சமீபத்திய, வழக்கமான மொழிபெயர்த்துரைத்தல் அனுபவத்தைக் கொண்டிருப்பார்கள், மேலும் ஆஸ்லான் அல்லது காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பில் NAATI சான்றிதழைப் பெற்றிருப்பார்கள்
சான்றளிக்கப்பட்டத் தற்காலிகக் காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் என்பவர்கள், மேம்பட்ட காட்சி-சைகைத் தகவல் தொடர்புத் திறன்களைக் கொண்ட, காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஆவர். ஆஸ்லான் மொழியில் சரளமாகப் பேசத் தெரியாத காது கேளாதோரை அணுகுவதை உறுதி செய்வதற்காக, காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் (கேட்கும் திறன் கொண்ட) ஆஸ்லான் மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒரு காது கேளாத நபருக்குப் பின்வரும் காரணங்களுக்காக காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்படலாம்:
- அவர்களுக்கு புலன்சார் அல்லது அறிதிறன் குறைபாடு இருந்தால்
- சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து, ஆஸ்லான் அல்லாத வேறு மொழியில் சைகை மொழி பேசினால்
- அவர்களுக்கு மரபுசார் ஆஸ்லான் மொழித் திறன்கள் குறைவாக இருந்தால்.
- உரையாடல்களை மொழிபெயர்த்துரைத்தல் (தொடர்ச்சியான மற்றும் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
- எழுதப்பட்ட ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லான் மொழிக்கும், எழுதப்பட்ட ஆங்கிலத்திலிருந்து மரபுசாரா சைகை மொழிக்கும் ஆவணங்களைப் படித்து மொழிபெயர்த்தல்
அங்கீகரிக்கப்பட்ட தொழில்புரியும் மொழிபெயர்ப்பாளர்கள் (எழுதப்பட்ட ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லான் மொழிக்கு) ஆங்கில மூல ஆவணங்கள் அல்லது காணொளிகளை ஆஸ்லான் மொழியில் மொழிபெயர்க்கின்றனர். இவர்களின் திறன்கள் NAATI-ஆல் சோதிக்கப்படவில்லை, ஆனால் குறைந்தபட்ச பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளனர் மற்றும் சமீபத்திய, வழக்கமான மொழிபெயர்த்துரைத்தல் அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.
NAATI இணையதளத்தில் சான்றளிப்பு அமைப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்