உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

This website will display in the language you choose.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இதன்படி வடிகட்டவும்:


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

பெயரை மட்டும் கொண்டு தேடுவது, ஒரு தொழில்புரிவோரைச் சரிபார்க்க நம்பகமான வழி அல்ல. பல தொழில்புரிவோர்கள் ஓரே பெயரையோ அல்லது ஒத்த பெயர்களையோ கொண்டிருக்கலாம், மேலும் சிலர் ஒரே மாதிரியான நற்சான்றிதழ் வகைகளையும் வைத்திருக்கலாம். இது நீங்கள் சரியான நபரையே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதைக் கடினமாக்கும்.

ஒரு தொழில்புரிவோரைச் சரிபார்க்க மிகத்துல்லியமான வழி, அவர்களின் CPN (தொழில்புரிவோர் நற்சான்றிதழ் எண்) -ஐப் பயன்படுத்துவதாகும். சான்றளிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்புரிவோருக்கும் ஒரு தனித்துவமான CPN இருக்கும், இதன் மூலம் நீங்கள் அவர்களின் தற்போதைய நற்சான்றிதழ் நிலையை நம்பிக்கையுடன் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைப்பது:

  • தொழில்புரிவோரிடம் அவர்களின் CPN-ஐக் கேளுங்கள்
  • அவர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்க NAATI-இன் “ஒரு தொழில்புரிவோரைச் சரிபார்க்கவும்” ("Check a Practitioner") கருவியைப் பயன்படுத்துங்கள்

எங்கள் பொதுத் தகவல் தொகுதியானது தங்கள் விவரங்களைக் காட்டத் தேர்ந்தெடுத்தத் தொழில்புரிவோர்களைக் கண்டறிந்து தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாத் தொழில்புரிவோர்களும், குறிப்பாக அவர்கள் தங்கள் தொடர்புத் தகவலைக் காட்ட விரும்பவில்லை என்றால், இந்தத் தகவல் தொகுதியில் இடம்பெறமாட்டார்கள்.

நீங்கள் ஒரு சான்றளிக்கப்பட்டத் தொழில்புரிவோரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, எப்போதும் அவர்களின் CPN-ஐக் கேட்டு, அதிகாரப்பூர்வக் கருவி மூலம் அதைச் சரிபார்க்கவும்.


இந்தத் தகவல் தொகுதியில் இடம்பெறக் குறைந்தது ஒரு NAATI-சான்றளிக்கப்பட்டத் தொழில்புரிவோர் தேர்ந்தெடுத்த மொழிகளை மட்டுமே இந்த மொழிப் பட்டியல் காட்டுகிறது.

உங்கள் மொழியை உங்களால் காண முடியவில்லை என்றால், அதற்கான காரணம் பின்வருவனவாக இருக்கலாம்:

  • தற்போது அந்த மொழியில் தொழில்புரிவோர்கள் யாரும் இல்லை, அல்லது
  • அந்த மொழியில் தொழில்புரிவோர்கள் இந்தத் தகவல் தொகுதியில் தங்கள் விவரங்களைக் காட்ட விரும்பவில்லை.

பயிற்சியாளர்கள் சேர விரும்பும்போது, நாங்கள் இந்தத் தகவல் தொகுதியைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம்.

இந்தக் தகவல் தொகுதியில் உள்ள மொழிகள் பொதுவாக, தரநிலை ISO 639-3 மொழிப் பெயர்களைப் பயன்படுத்திப் பட்டியலிடப்படுகின்றன. இதன் பொருள் என்னவென்றால், சில மொழிகள் வேறுபட்ட, ஆனால் தொடர்புடைய பெயரில் தோன்றக்கூடும்.

எடுத்துக்காட்டாக, 'கிஸ்வாஹிலி'க்குப் பதிலாக 'சுவாஹிலி' பட்டியலிடப்பட்டிருக்கலாம்.

உங்கள் மொழியை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பின்வருவனவற்றைப் பயன்படுத்தித் தேட முயற்சிக்கவும்:

  • ஒரு பரவலான மொழிப் பெயர்
  • ஒரு மாற்று எழுத்துக்கூட்டல்

உங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றால், பின்வரும் எங்கள் வழிகாட்டியைப் பார்க்கவும்: 'சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது' அல்லது உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

'சரிபார்க்கப்பட்டது, ஆனால் காலாவதியானது' என்பதன் பொருள் என்னவென்றால், தொழில்புரிவோர் ஏற்கனவே NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டிருந்தார், ஆனால் அவருடைய சான்றிதழ் இப்போது செல்லுபடியாகாது என்பதாகும். NAATI சான்றிதழ்கள், மறுசான்றளிப்பு எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அவை மறுசான்றளிப்பு பெறப்படாவிட்டால், காலாவதியாகிவிடும். காலாவதியான சான்றிதழைக் கொண்ட ஒரு தொழில்புரிவோர் தற்போதைய தொழில்முறைத் தரங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்பதை NAATI-ஆல் உறுதிப்படுத்த முடியாது.

மொழிபெயர்ப்புகளுக்கு: ஒரு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர், தனது சான்றிதழைச் செயல்பாட்டில் வைத்திருந்தபோது ஒரு மொழிபெயர்ப்பைச் செய்து முடித்திருந்தால், அது காலவரையின்றி செல்லுபடியாகும்.

மொழிபெயர்ப்புகளுக்குக் காலாவதித் தேதி இல்லை. ஒரு ஆவணம் NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்டவுடன், அது காலவரையின்றிச் செல்லுபடியாகும். இருப்பினும், அரசாங்க முகமைகள் போன்ற சில நிறுவனங்கள், சமீபத்திய மொழிபெயர்ப்பையோ அல்லது உட்கருத்து மாறவில்லை என்பதற்கான உறுதிப்படுத்தலையோ கோரலாம். எனவே, அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைச் சரிபார்ப்பது எப்போதும் ஒரு நல்ல யோசனையாகும்.

தொழில்புரிவோர் சுயவிவரங்களில் உள்ள சில தகவல்கள் விருப்பத்திற்குட்பட்டவை மற்றும் சுயமாகத் தெரிவிக்கப்படுபவை. தகுதிகள், சேவைகள் அல்லது நிபுணத்துவத் துறைகள் போன்ற விவரங்களைப் பகிர்வதா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய தொழில்புரிவோர்களை NAATI அனுமதிக்கிறது. இதன் காரணமாக, அந்தத் தகவல்கள் NAATI-ஆல் சரிபார்க்கப்படுவதில்லை.

ஒரு துறை காட்டப்படவில்லை என்றால், தொழில்புரிவோர் அதைப் பகிர விரும்பவில்லை என்பதே சாதாரணமாக அதன் பொருளாகும். அந்தத் துறையில் அவர்களுக்குப் பயிற்சி அல்லது நிபுணத்துவம் இல்லை என்பது பொருளல்ல.

இந்தக் கருவி ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் தற்போது NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளாரா என்பதைச் சரிபார்க்கவும், அவர்களின் சான்றிதழ் விவரங்களைக் காணவும் உங்களை அனுமதிக்கிறது.

நீங்கள் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ள தொழில்புரிவோர் தகுதி வாய்ந்தவரா, சான்றளிக்கப்பட்டவரா, மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்கக்கூடியவரா என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அல்லது, நீங்கள் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பு, NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் முடிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்கவும் இது உங்களை அனுமதிக்கிறது.

NAATI சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் யாரும் கிடைக்கவில்லை என்றால், மொழி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து வேறு தெரிவுகள் இருக்கலாம்.

நடைமுறை வழிகாட்டுதலுக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும், “NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது” என்ற எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.

அது உங்கள் தேவைகளைப் பொறுத்தது. மேலதிக வழிகாட்டுதலுக்கு, “ஒரு தனிநபர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல்” என்ற எங்கள் கட்டுரையைப் படியுங்கள்.

துறைசார் நிபுணத்துவம் என்பது சட்டம், மருத்துவம், சுகாதாரம், கல்வி அல்லது சமூகச் சேவைகள் போன்ற ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரு தொழில்புரிவோருக்கு இருக்கும் அறிவையும் அனுபவத்தையும் குறிக்கிறது.

தொடர்புடைய துறைசார் நிபுணத்துவம் கொண்ட ஒரு தொழில்புரிவோரைத் தேர்ந்தெடுப்பது என்பது, மொழிபெயர்த்துரைத்தல் அல்லது மொழிபெயர்த்தலானது துல்லியமாகவும், பொருத்தமானதாகவும், நோக்கத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும். NAATI இணையத் தகவல் தொகுதியில் துறைசார் நிபுணத்துவத்தைப் பட்டியலிடுவது விருப்பத்திற்குட்பட்டது மற்றும் தொழில்புரிவோரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது, மேலும் இது NAATI-ஆல் சரிபார்க்கப்படுவதில்லை. ஒரு தொழில்புரிவோர் தனது துறைசார் நிபுணத்துவத்தைப் பட்டியலிடவில்லை என்றால், அவருக்கு அந்தத் துறையில் அனுபவம் இல்லை என்று பொருளல்ல.

சில கலாச்சாரங்களில், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்த மொழிபெயர்த்துரைப்பாளருடன் பேசுவது மட்டுமே வசதியாக இருப்பதாக உணரலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பெண், உணர்வுபூர்வமான உடல்நலம் அல்லது சட்ட விவகாரங்களுக்கு ஒரு பெண் மொழிபெயர்ப்பாளரையே விரும்பலாம். இந்த விருப்பத்தை வழங்குவது, வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் இருப்பதாக உணர உதவுகிறது, அத்துடன் இது தகவல் தொடர்பு துல்லியமாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

இணையவழித் தகவல் தொகுதியில் பாலினத்தைக் காண்பிப்பது கட்டாயமில்லை, அது தொழில்புரிவோரின் முடிவைப் பொறுத்ததாகும்.

1-10 of 17 results
Was this page helpful?(தேவைப்படுகிறது)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.