உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

This website will display in the language you choose.

மொழிபெயர்த்தலுக்காக உங்கள் ஆவணத்தைத் தயார் செய்வது எப்படி

Category மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணிபுரிதல் வெளியிடப்பட்டது 30 January 2026

இந்தப் பக்கத்தில்


மொழிபெயர்ப்புக்கு முன் உங்கள் ஆவணத்தை முறையாகத் தயாரிப்பது, மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் திறமையாகப் பணியாற்ற உதவுகிறது மற்றும் நீங்கள் துல்லியமான, உயர்தரமான மொழிபெயர்ப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது.

மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுதல்

மொழிபெயர்ப்பாளர்கள் திறம்பட வேலை செய்ய உதவும் சிறப்புப் பயன்பாட்டு மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர், மூல உரையானது சொல் செயலாக்க வடிவத்தில் (word processing format) (எடுத்துக்காட்டாக, Microsoft Word) இருக்கும் போது அவை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும்.

கணினி உதவியுடனான மொழிபெயர்த்தல் (CAT) கருவிகள், வேகமான மொழிபெயர்த்தலுக்காக ஓர் ஆவணத்தைப் பகுதி பகுதிகளாகப் பிரிப்பது, அல்லது மூல ஆவணத்தில் உள்ள அதே வடிவமைப்பைத் (format) தானாகவே பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களை மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்குகின்றன.

நீண்ட உரைகளுக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் CAT கருவியைப் பயன்படுத்துவார்கள். வழக்கமான ஆவணங்களுக்கு, அவர்கள் ஒரு சொல் செயலாக்கியில் (word processor) உள்ள முன்வடிவுக்கு (template) நேரடியாக மொழிபெயர்க்கலாம்.

சூழல் தகவல் மற்றும் நிலைத்தன்மை

நீண்ட ஆவணங்களுக்காக அல்லது முந்தைய மொழிபெயர்ப்புகள் ஏற்கனவே உள்ள ஆவணங்களுக்காக, சொல்லாட்சியை ஒரே மாதிரியாக வைத்திருப்பது முக்கியமாகும். மொழிபெயர்ப்பாளர்களுக்கு இதைச் செய்வதற்கு உதவ, முடிந்தவரை அவர்களுக்குச் சூழல் தகவல்கள், சொற்களஞ்சியங்கள் மற்றும் முந்தைய மொழிபெயர்ப்புகளின் நகல்களை வழங்கவும்.

ஒரே சொல் அல்லது சொற்றொடரை பல்வேறு விதங்களில் மொழிபெயர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் “bank” என்ற சொல் ஒரு நிதி நிறுவனத்தையோ அல்லது ஒரு ஆற்றின் கரையையோ குறிக்கலாம். சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க மொழிபெயர்ப்பாளருக்கு சூழல் தகவல் உதவுகிறது. உங்கள் ஆவணம் முழுவதும் நிலையான சொல் தேர்வுகளை உறுதிசெய்யக் குறிப்புப் பொருட்கள் உதவுகின்றன.

உங்கள் மொழிபெயர்ப்பாளருக்கு வழங்க வேண்டிய தகவல்கள்

சூழல் தகவல் மற்றும் பின்னணி

  • மொழிபெயர்த்தல் எவ்வாறு பயன்படுத்தப்படும்?
  • மொழிபெயர்த்தலின் நோக்கம் என்ன?
  • இலக்கு வைக்கப்பட்ட பார்வையாளர்கள் யார்?

குறிப்பு ஆதாரங்கள்

  • சொற்களின் அகராதி
  • நடை வகைகளின் வழிகாட்டி (style guide)
  • சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம்
  • முந்தைய மொழிபெயர்ப்புகளின் எடுத்துக்காட்டுகள் (இது சொற்களஞ்சியம், நடை வகை மற்றும் சொற்றொடர் அமைப்பை ஒரே மாதிரியாக வைத்திருக்க உதவுகிறது)

சிறப்பு அறிவுறுத்தல்கள்

இந்தக் கேள்விகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • மேற்கோள்களும், குறிப்புகளும் மூல மொழியிலேயே இருக்க வேண்டுமா? (இது கண்டுபிடிக்கும் வழிமுறைக்காகப் (traceability) பரிந்துரைக்கப்படுகிறது)
  • அதிகாரப்பூர்வ அமைப்புகள் அல்லது தயாரிப்புகளின் பெயர்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டுமா அல்லது மூல மொழியிலேயே இருக்க வேண்டுமா?
  • மொழிபெயர்ப்பு மற்றும் மூலச் சொல் ஆகிய இரண்டும் காட்டப்பட வேண்டுமா?

எடுத்துக்காட்டாக, நீங்கள் பின்வருவனவற்றை விரும்பலாம்:

  • “சமூகப் பாதுகாப்பு நிர்வாகம்” முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது
  • “சமூகப் பாதுகாப்பு நிர்வாகம் (SSA)” அதன் மூலச் சுருக்கக் குறியீட்டுடன்
  • “SSA” ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது

ஆவணத் தரச் சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஆவணத்தை மொழிபெயர்த்தலுக்கு அனுப்புவதற்கு முன், இந்த முக்கியமான அம்சங்களைச் சரிபார்க்கவும்:

ஆவணத்தின் நிலை

  • இது உரையின் இறுதிப் பதிப்பா?
  • இது சரிபார்க்கப்பட்டுப் பிழைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?
  • உரை தெளிவாகவும், குழப்பமின்றியும் உள்ளதா?

ஆவணத்தின் தரம்

  • ஆவணம் உயர்தரமானதா?
  • இது பகுப்பாய்வு (scan) செய்யப்பட்டிருந்தால், உரை தெளிவாகவும், எளிதாகப் படிக்கக்கூடியதாகவும் உள்ளதா?
  • இது Microsoft Word போன்ற திருத்தக்கூடிய கோப்பு வடிவத்தில் உள்ளதா?

வடிவமைப்புத் தேவைகள்

  • இறுதி மொழிபெயர்ப்பு உங்களுக்கு எந்த வடிவத்தில் தேவை?
  • இதற்குச் சிறப்பு வடிவமைப்பு தேவையா?
  • இது ஒரு இணையதளத்திற்கானதா?
  • மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தக்கூடிய முன்வடிவு (template) உங்களிடம் உள்ளதா?

படங்கள் மற்றும் வரைபடங்கள்

  • ஆவணத்தில் படங்கள் (Images), வரைபடங்கள் (graphs) அல்லது இலக்கங்கள் (figures) உள்ளதா?
  • ஏதேனும் வரைபடங்கள் அல்லது விளக்கப்படங்களை (charts) மொழிபெயர்க்க வேண்டுமா?
  • மூலக்கோப்புகளை (வரைபடங்களுக்கான Excel கோப்புகள் போன்றவை) உங்களால் வழங்க முடியுமா?

இறுதி உதவிக்குறிப்புகள்

நல்ல தயாரிப்பானது உங்கள் மொழிபெயர்த்தலின் தரம் மற்றும் துல்லியத்திற்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பின்வருவனவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள்:

  • உங்கள் ஆவணத்தை முறையாகத் தயாரிக்கவும்
  • சூழல் தகவல் மற்றும் குறிப்பு ஆதாரங்களை வழங்கவும்
  • உங்கள் தேவைகள் குறித்து உங்கள் மொழிபெயர்ப்பாளரிடம் தெளிவாகத் தொடர்பு கொள்ளவும்
Was this page helpful?(தேவைப்படுகிறது)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.