உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த இணையதளம் நீங்கள் வேண்டுகின்ற மொழியில் காண்பிக்கும்.

மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தலுக்கான செலவுகளைப் புரிந்துகொள்ளுதல்

பிரிவு மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணிபுரிதல் வெளியிடப்பட்டது 30 ஜனவரி 2026

“இந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும்?” என்பதற்கான விடை ஒரே பதிலில் இல்லை. ஒவ்வொரு வேலைக்கான விலை நிர்ணயம் என்பது, வழங்கப்படும் சேவை, தொழில் புரிவோரின் அனுபவம் மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்ததாகும். தொழில் புரிவோர்கள் பொதுவாகத் தரமான சேவையை வழங்கும் அதே வேளையில், நியாயமான வருமானத்தை ஈட்டக்கூடிய கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள்.

விலை நிர்ணயத்துக்குத் தாக்கத்தை உண்டுபண்ணும் சில காரணிகளை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. இந்தக் காரணிகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் தகவலறிந்த தேர்வுகளைச் செய்து, யதார்த்தமாக வரவு செலவைத் திட்டமிடலாம்

செலவுகளைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, பல விலைப்புள்ளிகளைக் கோருவதாகும், இதன் மூலம் நீங்கள் விலையையும் அதில் என்னென்ன அடங்கும் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பொதுவாக சுயதொழில் செய்பவர்களாகப் பணியாற்றுகிறார்கள், அல்லது மொழிச் சேவை வழங்குநர்களால் (LSPs) பணியமர்த்தப்படுகிறார்கள். பொதுவாக, மொழிச் சேவை வழங்குநர்களுக்கு (LSPs) அதிகமான வணிக மேற்செலவுகள் உள்ளன, அதேசமயம் சுயதொழில் செய்பவர்கள் தங்கள் சொந்தச் செலவுகளைத் தாங்களே நிர்வகிக்கிறார்கள்.

கட்டணங்கள் பின்வருவனவற்றால் பாதிக்கப்படுகின்றன:

  • சேவையின் வகை, இதில் எத்தனை மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அடங்கும்
  • கூறப்படும் செய்தியின் சிக்கலான தன்மை, இதில் தேவைப்படும் தயாரிப்பு அல்லது ஆராய்ச்சியின் அளவும் அடங்கும்
  • NAATI சான்றளிப்பின் நிலை
  • பயிற்சி மற்றும் அனுபவம்
  • காலக்கெடு, வேலை நேரத்திற்குப் பிறகான பணி அல்லது அவசரக் கட்டணங்கள்
  • களப்பணிக்குச் செல்வதற்கான பயணச் செலவுகள்.

சேவைகளின் வகைகள் மற்றும் விலை நிர்ணயக் கட்டமைப்புகள்

வெவ்வேறு சேவைகளுக்கு வெவ்வேறு விலை நிர்ணயக் கட்டமைப்புகள் உள்ளன.

  • மொழிபெயர்ப்புச் சேவைகளுக்கு பெரும்பாலும் ஒரு ஆவணத்திற்கு என்றோ, ஒரு பக்கத்திற்கு என்றோ அல்லது ஒரு வார்த்தைக்கு என்றோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் பணியின் வகையைப் பொறுத்து ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு எனக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
  • மொழிபெயர்த்துரைத்தல் சேவைகளுக்கு ஒரு மணி நேரம், அரை நாள் அல்லது முழு நாள் என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படலாம். மொழிபெயர்த்துரைப்பாளர் கட்டணங்களில் தயாரிப்பு நேரம் மற்றும் பயணச் செலவுகளும் அடங்கும்.

மொழிபெயர்ப்பு விலை நிர்ணயம்

  • வழக்கமான ஆவண மொழிபெயர்த்தல்கள் (பிறப்புச் சான்றிதழ்கள் அல்லது ஓட்டுநர் உரிமங்கள் போன்றவை): பொதுவாக ஒரு பக்கத்திற்கு அல்லது ஓர் ஆவணத்திற்கு எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை முழுமையான மொழிபெயர்த்தல்களாகவோ அல்லது முக்கியப் பகுதிகளின் சுருக்க மொழிபெயர்த்தல்களாகவோ இருக்கலாம்.
  • பொதுவான மொழிபெயர்த்தல்கள்: பொதுவாக ஒரு வார்த்தைக்கு எனக் கட்டணம் வசூலிக்கப்படும், சிறிய பணிகளுக்குக் குறைந்தபட்சக் கட்டணம் உண்டு.
  • சிறப்புப் பணி (சட்டம், மருத்துவம் அல்லது இலக்கியம் போன்றவை): தேவைப்படும் நிபுணத்துவம் காரணமாகக் கட்டணம் அதிகமாக இருக்கும். கூடுதலான தர உறுதிச் செலவுகளும் இதில் அடங்கக்கூடும்.
  • இயந்திர மொழிபெயர்ப்புத் திருத்தம்: இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட வெளியீட்டைத் துல்லியப்படுத்துவதற்காகத் திருத்துதல். இயந்திர மொழிபெயர்ப்பின் தரத்தைப் பொறுத்து, மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு வார்த்தைக்கு என்றோ அல்லது ஒரு மணி நேரத்திற்கு என்றோ கட்டணம் வசூலிக்கலாம்.

மொழிபெயர்த்துரைத்தல் விலை நிர்ணயம்

  • மொழிபெயர்த்துரைத்தல் சேவைகள்: ஒரு மணிநேர அடிப்படையிலோ, அரை நாள் அடிப்படையிலோ அல்லது தினசரி அடிப்படையிலோ கட்டணம் வசூலிக்கப்படும். வழங்கப்படும் முறையைப் (தொடர்ச்சியான அல்லது சமநேர மொழிபெயர்த்துரைத்தல், நேரில் அல்லது தொலைவிலிருந்து) பொறுத்துக் கட்டணங்கள் மாறுபடும்.
  • கருத்தரங்கு அல்லது ஆஸ்லான் மொழிபெயர்த்துரைத்தல்: குறிப்பாக நீண்டநேரப் பணிகளுக்கு, பெரும்பாலும் இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் தேவைப்படுவார்கள்.
  • கருத்தரங்கு மொழிபெயர்த்துரைத்தல்: சிறப்பு உபகரணங்கள் தேவைப்படலாம்.
  • குறைந்தபட்ச முன்பதிவு மற்றும் ரத்து செய்தல்: குறுகியநேரப் பணிகளுக்குக் கூட, மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பெரும்பாலும் ஒரு குறைந்தபட்சக் கட்டணத்தை (எடுத்துக்காட்டாக, 2-3 மணிநேரம்) வசூலிப்பார்கள். முன்பதிவைக் குறுகியகால அறிவிப்புடன் ரத்து செய்தால், அவர்கள் ஒரு கட்டணம் வசூலிக்கலாம்.

விலைப்புள்ளி (quote) யைக் கோரும்போது என்ன கேட்க வேண்டும்

திடீர்க் குழப்பங்களைத் தவிர்க்க, எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்:

  • மொத்தச் செலவு (தேவைப்பட்டால், ஜிஎஸ்டி உட்பட)
  • கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது (வார்த்தை ஒன்றுக்கு, ஒரு மணி நேரத்திற்கு, ஓர் ஆவணத்திற்கு)
  • பணியை முடிக்க எதிர்பார்க்கப்படும் நேரம்
  • மொழிபெயர்ப்புச் செலவுகளில் தரச் சரிபார்ப்பு அடங்குமா
  • செலவுகளைக் குறைக்க வழிகள் உள்ளனவா (எடுத்துக்காட்டாக, அவசரக் கட்டணங்களைத் தவிர்க்கக் காலக்கெடுவை சரிசெய்தல்)

உங்கள் கோரிக்கை எவ்வளவு தெளிவாகவும் விரிவாகவும் உள்ளதோ, அந்த அளவிற்கு விலைப்புள்ளி துல்லியமாக இருக்கும்.

இந்தப் பக்கம் பயனுள்ளதாக இருந்ததா?(தேவைப்படுகிறது)

உங்கள் பின்னூட்டம் இந்தப் பக்கத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது. எங்கள் இணையதளத்தை மேம்படுத்த NAATI இந்தப் பின்னூட்டத்தைப் பயன்படுத்துகிறது.

உங்களுக்குப் பதில் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களது எங்களைத் தொடர்பு கொள்க படிவத்தைப்

பயன்படுத்தவும்.