உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

This website will display in the language you choose.

மொழிபெயர்ப்பாளரா அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரா: எனக்கு யார் தேவை?

Category மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணிபுரிதல் வெளியிடப்பட்டது 15 January 2026


வேறொரு மொழியில் தொடர்புகொள்வதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் மொழிபெயர்ப்பாளருடன் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளருடன் பணியாற்ற வேண்டியிருக்கும்.
இருவரும் மொழி சார்ந்து பணிபுரிந்தாலும், வெவ்வேறு வேலைகளைச் செய்கிறார்கள்.

எனக்கு எது தேவை என்பதை நான் எப்படித் தீர்மானிப்பது?

அது எழுதப்பட்டிருந்தால், உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை. அது பேசப்பட்டாலோ அல்லது கையொப்பமிடப்பட்டாலோ, உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவை.
நீங்கள் ஆவணங்களைப் பகிர்கிறீர்களா அல்லது உரையாடுகிறீர்களா என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ன செய்கிறார்?

ஒரு மொழிபெயர்ப்பாளர் எழுதப்பட்ட வார்த்தையுடன் வேலை செய்கிறார். ஒரு மொழியில் எழுதப்பட்ட உட்கருத்துக்களை எடுத்து மற்றொரு மொழியில் துல்லியமான, கலாச்சார ரீதியாகப் பொருத்தமான பதிப்பைத் தயாரிப்பதே அவர்களின் வேலையாகும்.

மொழிபெயர்ப்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கான சில பொதுவான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • பிறப்புச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள், மற்றும் பிற அடையாள ஆவணங்கள்
  • சட்டரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் நிதிசார்ந்த அறிக்கைகள்
  • மருத்துவ அறிக்கைகள்
  • இணையதளங்கள், பிரசுரங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் பொருட்கள்
  • மின்னஞ்சல்கள், கடிதங்கள் மற்றும் எழுதப்பட்ட அறிவுறுத்தல்கள்
  • அறிவுறுத்தல் கையேடுகள்

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வார்த்தைகளை மாற்றுவது மட்டுமல்ல. ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் என்பவர், பொருள் தெளிவாகவும் சீராகவும் இருப்பதையும், கலைச்சொல் சரியாக இருக்கிறது என்பதையும், தொனி ஆவணத்தின் நோக்கத்துடன் சரியாகப் பொருந்துகிறது என்பதையும் உறுதிசெய்கிறார். ஆஸ்திரேலியாவில், அரசாங்கத் துறைகள் போன்ற பல நிறுவனங்கள், NAATI- சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஒருவரால் மொழிபெயர்ப்புகள் செய்து முடிக்கப்பட வேண்டும். இது தரம் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்கிறது.

ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் என்ன செய்கிறார்?

ஒரு மொழிபெயர்ப்பாளர் பேச்சு அல்லது சைகை மொழியுடன் வேலை செய்கிறார், அது வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கு நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்ள உதவுகிறது.

பின்வரும் சூழலில் உங்களுக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்படலாம்:

  • மருத்துவ அல்லது சுகாதார சந்திப்பு ஏற்பாடுகளில் கலந்துகொள்ளுதல்
  • ‘சென்டர்லிங்க்’, காவல்துறை அல்லது பிற அரசு சேவைகளுடன் பேசுதல்
  • வணிகக் கூட்டங்களில் பங்கேற்றல்
  • சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றல்
  • கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் அல்லது சமூக நிகழ்வுகளில் சேருதல்

மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஒரு மொழியில் சொல்வதைக் கேட்டு, மற்றொரு மொழியில் செய்தியைத் துல்லியமாகவும், இயல்பாகவும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, அல்லது காணொளி வழியாகவோ வேலை செய்யமுடியும். பல சூழ்நிலைகளில், குறிப்பாக உடல்நலம் மற்றும் சட்ட அமைப்புகளில், மக்கள் தங்கள் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் தேர்வுகளைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யத் துல்லியமான மொழிபெயர்த்துரைத்தல் அவசியமாகும்.

எழுதப்பட்ட மற்றும் பேசப்படும் உரைகளுக்கு இடையில் நான் வேலை செய்தால் என்னவாகும்?

சில நேரங்களில், மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் எழுதப்பட்ட மற்றும் பேச்சு/சைகை வார்த்தைகளுக்கு இடையில் வேலை செய்யலாம். எடுத்துக்காட்டாக:

  • படித்து மொழிபெயர்த்தல்: ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் (மருத்துவமனை ஒப்புதல் படிவம் போன்ற) எழுதப்பட்ட ஆவணத்தைப் படித்தவண்ணம் அதை நிகழ்நேரத்தில் பேச்சு மொழியில் அல்லது சைகை மொழியில் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பார்.
  • ஒலிபெயர்த்தல்: ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட பேச்சைக் கேட்டு அதை வேறு மொழியில் எழுதுகிறார்

இதைப் பற்றி யோசிக்க ஒரு நல்ல வழி – இறுதியில் நாம் பெற விரும்புவது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான். இது ஒரு ஆவணமாக இருந்தால், உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை. இது பேச்சு, உரையாடல் அல்லது காணொளியாக இருந்தால், உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவை.

தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்களை நான் எங்கே கண்டறியலாம்?

மொழிபெயர்ப்பாளரோ அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரோ, NAATI-சான்றளிக்கப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் மிகவும் சிறந்ததாகும். மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கு NAATI -இல் வெவ்வேறு நற்சான்றிதழ்கள் உள்ளன, மேலும் உங்களுக்குத் தேவையான நபருக்கு உணர்வுபூர்வமாக, தொழில்முறையில் தகவலைத் துல்லியமாக மாற்றுவதற்குத் அவசியமான திறன்கள் மற்றும் பயிற்சிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தச் சான்றிதழ் உதவுகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரை நீங்கள் NAATI -இன் இணையத் தகவல் தொகுதியில் காணலாம்.

Was this page helpful?(தேவைப்படுகிறது)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.