சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது
இந்தப் பக்கத்தில்
- மொழிச் சேவை வழங்குநர் ஒருவரைத் தொடர்பு கொள்ளுங்கள்
- மொழிபெயர்த்துரைத்தலுக்குக் குழு அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்
- சர்வதேச அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள்
- NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் மொழிபெயர்த்தல் தேவையா?
- முக்கிய எச்சரிக்கை: குடும்பத்தினர் அல்லது நண்பர்களை மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பயன்படுத்த வேண்டாம்
- உதவி தேவையா?
ஆஸ்திரேலியாவில் சில மொழிகளுக்கு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்களுக்கு மொழிச் சேவைகள் தேவைப்பட்டால், இந்தக் கட்டுரை சில தெரிவுகளை விளக்குகிறது.
மொழிச் சேவை வழங்குநர் ஒருவரைத் தொடர்பு கொள்ளுங்கள்
NAATI சான்றிதழ் இல்லாவிட்டாலும், பணி அனுபவமும் பயிற்சியும் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரை மொழிச் சேவை வழங்குநர்களால் கண்டறிய முடியும். அவர்களின் அனுபவத்தைப் பற்றிக் கேட்டு, பரிந்துரைகள் வேண்டுமெனக் கேளுங்கள்.
மொழிபெயர்த்துரைத்தலுக்குக் குழு அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்
சில சூழ்நிலைகளில், தொடர்புடைய மொழியைப் பேசும் NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளருடன் இணைந்து, அந்த மொழியைப் பேசும் இருமொழி நபரையும் மொழிபெயர்த்துரைக்க நீங்கள் கேட்கலாம். இந்தக் குழு அணுகுமுறை தர உத்தரவாதத்தை வழங்குகிறது, ஏனென்றால் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர், இருமொழி நபருக்கு எவ்வாறு துல்லியமாக மொழிபெயர்த்துரைக்க வேண்டும் என்பதில் ஆலோசனை வழங்க முடியும்; இருப்பினும், இது வழக்கத்தை விட மெதுவாகவும், அதிக நேரம் எடுக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.
சர்வதேச அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள்
பின்வருவனவற்றைத் தொடர்புகொள்ள முயற்சிக்கவும்:
- தூதரகம், உயர் ஆணையம் அல்லது துணைத் தூதரக அலுவலகங்கள்
- வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் அங்கீகார அமைப்புகள்
- வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் தொழில்முறைச் சங்கங்கள்
- AIIC (சர்வதேசக் கருத்தரங்கு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சங்கம்)
- சர்வதேச மொழிபெயர்ப்பாளர்கள் கூட்டமைப்பு (அனைத்து உறுப்பு நாடுகளையும், அவற்றின் தொழில்முறைச் சங்கங்களையும் காண உறுப்பினர் பட்டியலைப் பார்க்கவும்)
- ATA (அமெரிக்க மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்)
- NZSTI (நியூசிலாந்து மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சமூகம்)
- வெளிநாட்டு மொழிச் சேவை வழங்குநர்கள்
NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் மொழிபெயர்த்தல் தேவையா?
ஓர் அரசு நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திற்கு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்தல் தேவைப்பட்டு, உங்கள் மொழியில் யாரும் கிடைக்கவில்லை என்றால், NAATI-ஐத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மொழியில் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கடிதத்தை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்.
முக்கிய எச்சரிக்கை: குடும்பத்தினர் அல்லது நண்பர்களை மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பயன்படுத்த வேண்டாம்
குடும்ப உறுப்பினர்கள், துணைவர்கள், நண்பர்கள் அல்லது குழந்தைகளை மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பயன்படுத்துவதை, குறிப்பாகப் பின்வரும் முக்கியமான சூழ்நிலைகளில், தவிர்க்குமாறு NAATI கடுமையாக அறிவுறுத்துகிறது:
- மருத்துவ சந்திப்புஏற்பாடுகள்
- சட்ட விஷயங்கள்
- அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வச் சேவைகள்
உதவி தேவையா?
என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மிகச்சிறந்த தேர்வுக்கான ஆலோசனையைப் பெற NAATI-ஐத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மொழிச் சேவை வழங்குநர் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.