பங்குதாரர் தொகுப்பு மற்றும் பிரச்சார ஆதாரவளங்கள்
‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்படத் தகுதியானவர்கள்’ என்பது, குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில், NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களின் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தேசியப் பிரச்சாரமாகும். இது, நோயாளிகள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை விட ஒரு தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளரைக் கேட்க ஊக்குவிக்கிறது, மேலும் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைத் தங்கள் பராமரிப்புக் கடமையின் ஒரு பகுதியாகப் பணியமர்த்துவதன் மதிப்பை அங்கீகரிப்பதில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கு ஆதரவளிக்கிறது.
இந்தப் பிரச்சாரம் பற்றி மேலும் இங்கே படிக்கவும்.
இந்தப் பங்குதாரர் தொகுப்பை எவ்வாறு பயன்படுத்துவது
மொழி வேறுபாடின்றி, நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் நம்பிக்கையுடன் தங்கள் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அணுகுவதற்கு வலுவூட்டும் வகையில், இந்தத் தொகுப்பில் உள்ள ஆதாரவளங்களைப் பங்குதாரர்கள் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த ஆதாரவளங்கள், NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களின் மதிப்பையும், அவர்களைப் பணியமர்த்தாததால் ஏற்படும் அபாயங்களையும் அங்கீகரிப்பதில் நோயாளிகளுக்கும். சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கும் ஆதரவளிக்கின்றன.
கீழே உள்ளவற்றில், உங்களுக்கோ அல்லது உங்கள் சமூகத்திற்கோ பொருத்தமான எந்த உடைமைகளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இணைப்பு மூலம் அணுகலாம். இவற்றைச் சமூக ஊடகங்கள், செய்திமடல்கள், அக இணையங்கள் அல்லது மின்னஞ்சல் வழியாகத் தாராளமாகப் பகிரலாம். நீங்கள் ‘லிங்க்ட்இன்’-இல் பகிரும்போது, உங்கள் பதிவில் NAATI-ஐக் குறியிடலாம்.
பிரச்சாரத்தை இன்னும் அதிகமாக முறைசார் அமைப்பில் (எடுத்துக்காட்டாக, ஒரு நிகழ்வில் எங்கள் காணெளிகளில் ஒன்றைக் காண்பிப்பது அல்லது ஒரு சமூக வானொலி நிலையத்தில் வானொலி விளம்பரத்தை ஒளிபரப்புவது) நீங்கள் ஊக்கமளிக்க விரும்பினால், தயவுசெய்து communications@naati.com.au என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
அனைத்துப் பிரச்சார உடைமைகளும்
சமூக ஊடக வில்லைகள்
ஒளிபரப்புச் சாதனங்கள்
உள்-வசன வரிகளுடன் கூடிய 60-வினாடி தொலைக்காட்சி விளம்பரம் (‘விமியோ’ இணைப்புகள்)
பிரச்சார வானொலி அறிவிப்புகள் (45 வினாடிகள்)
- அரபு மற்றும் ஆங்கிலம்
- கேன்டனீஸ் மற்றும் ஆங்கிலம்
- டாரி மற்றும் ஆங்கிலம்
- கிரேக்கம் மற்றும் ஆங்கிலம்
- இத்தாலியன் மற்றும் ஆங்கிலம்
- கொரியன் மற்றும் ஆங்கிலம்
- மாண்டரின் மற்றும் ஆங்கிலம்
- நேபாளி மற்றும் ஆங்கிலம்
- பாரசீகம் மற்றும் ஆங்கிலம்
- பஞ்சாபி மற்றும் ஆங்கிலம்
- ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம்
- வியட்நாமியம் மற்றும் ஆங்கிலம்
- ஏமி வாங் உடன் மாண்டரின் – சான்றளிக்கப்பட்ட கருத்தரங்கு மொழிபெயர்த்துரைப்பாளர் (மாண்டரின்/ஆங்கிலம்), சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (மாண்டரின்/ஆங்கிலம்) மற்றும் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (ஆங்கிலத்திலிருந்து சீனத்திற்கு)
- டியட் தூ உடன் வியட்நாமியம் – சான்றளிக்கப்பட்ட தற்காலிக மொழிபெயர்த்துரைப்பாளர் (வியட்நாமியம்/ஆங்கிலம்)
- ஏஞ்சலா சே உடன் கேன்டனீஸ் – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (மாண்டரின்/ஆங்கிலம் மற்றும் கேன்டனீஸ்/ஆங்கிலம்)
- லாமா அல்-அக்ராஸ் உடன் அரபு – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (அரபு/ஆங்கிலம்), சான்றளிக்கப்பட்டச் சட்டச் சிறப்பு மொழிபெயர்த்துரைப்பாளர் அறிவு (அரபு)
- வூலா டோமராஸ் உடன் கிரேக்கம் – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (கிரேக்கம்/ஆங்கிலம்), சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு)
- கேஸி லீ உடன் கொரியன் – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (கொரியன்/ஆங்கிலம்), சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (கொரியனிலிருந்து ஆங்கிலத்திற்கு)
- ஃபிரான்செஸ்கோ பிரிவிடெரா உடன் இத்தாலியன் – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (இத்தாலியன்/ஆங்கிலம்)
- ஷிவாலி வர்மா உடன் பஞ்சாபி – சான்றளிக்கப்பட்ட தற்காலிக மொழிபெயர்த்துரைப்பாளர் (பஞ்சாபி/ஆங்கிலம் மற்றும் ஹிந்தி/ஆங்கிலம்) , சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு)
- சின்டியா லீ உடன் ஸ்பானிஷ் – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (ஸ்பானிஷ்/ஆங்கிலம்) , சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (ஸ்பானிஷிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ்க்கு)
- முகமது தமீம் சயீது உடன் டாரி – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (டாரி/ஆங்கிலம்), அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மொழிபெயர்த்துரைப்பாளர் (ஹசராகி/ஆங்கிலம்)
- மரியம் ஹொசைனி உடன் பாரசீகம் – சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் (பாரசீகம்/ஆங்கிலம்), சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (பாரசீகத்திலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து பாரசீகம் )
- சுதிர் ஷக்யா உடன் நேபாளி – சான்றளிக்கப்பட்ட தற்காலிக மொழிபெயர்த்துரைப்பாளர் (நேபாளி/ஆங்கிலம்), சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் (நேபாளியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து நேபாளி )







