சுகாதார சுவரொட்டி ஆதாரவளம்
‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவர்கள்’ என்பது, குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில், NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களின் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தேசியப் பிரச்சாரமாகும். இது, நோயாளிகள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை விட ஒரு தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளரை வழங்குமாறு கேட்க ஊக்குவிக்கிறது, மேலும் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களைத் தங்கள் பராமரிப்புக் கடமையின் ஒரு பகுதியாகப் பணியமர்த்துவதன் மதிப்பை அங்கீகரிப்பதில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கு ஆதரவளிக்கிறது.
இந்தப் பிரச்சாரம் பற்றி மேலும் இங்கே வாசிக்கவும்.
இந்த சுவரொட்டியை எவ்வாறு பயன்படுத்துவது

இந்த சுவரொட்டியைப் பொது மருத்துவர் மருத்துவ நிலையங்கள் அல்லது இலவச மொழிபெயர்த்துரைத்தல் சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளின் நோயாளி காத்திருக்கும் அறைகளில் காட்சிப்படுத்தலாம். இது நோயாளிகளை ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரைக் கோருவதற்கு ஊக்குவிக்கும். LanguageLoop மற்றும் AUSIT உடன் இணைந்து NAATI உருவாக்கிய இந்த சுவரொட்டி, சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. மேலும், மொழிபெயர்த்துரைத்தல் சேவைகள் இரகசியமானவை மற்றும் தொழில்முறை சார்ந்தவை என்று நோயாளிகளுக்கு உறுதியளிக்கிறது.
பாதுகாப்பு, தகவலறிந்த முடிவெடுத்தல் மற்றும் தரமான சிகிச்சை ஆகியவற்றுக்கு நோயாளிகளுக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையே தெளிவான தகவல் பரிமாற்றம் அவசியமாகும்.
*’இது இலவசம்’ என்ற குறிப்பு இல்லாத இந்த சுவரொட்டியின் ஒரு பதிப்பு, கீழே பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளிலும் கிடைக்கிறது. ஒரு பிரதியைக் கோர, communications@naati.com.au என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.