மருத்துவ நடைமுறைகளுக்கான மின்னணு (டிஜிட்டல்) விழிப்புணர்வுக் கருவித்தொகுப்பு
‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவர்கள்’ என்பது, குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில், NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களின் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தேசியப் பிரச்சாரமாகும். இது, நோயாளிகள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை விட ஒரு தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளரை வழங்குமாறு கேட்க ஊக்குவிக்கிறது, மேலும் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களைத் தங்கள் பராமரிப்புக் கடமையின் ஒரு பகுதியாகப் பணியமர்த்துவதன் மதிப்பை அங்கீகரிப்பதில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கு ஆதரவளிக்கிறது.
இந்தப் பிரச்சாரம் பற்றி மேலும் இங்கே வாசிக்கவும்.

பிரச்சாரத் தொலைக்காட்சி விளம்பரம் (60 வினாடிகள்)
SBS In Language உடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்படுவதற்குத் தகுதியானவர்கள்’ என்ற தொலைக்காட்சி விளம்பரம்.
காத்திருப்பு அறைகளில் ஒளிபரப்புவதற்காக, இந்த 60 வினாடி தொலைக்காட்சி விளம்பரத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது ஆங்கிலத்தில் தொலைக்காட்சித் தலைப்புகளுடன் (closed captioning) கிடைக்கிறது. மேலும், அரபு, எளிமைப்படுத்தப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம், பிரெஞ்சு, கிரேக்கம், இந்தி, இத்தாலியன், கெமர், மாசிடோனியன், ரஷ்யன், செர்பியன், ஸ்பானிஷ், தாய் மற்றும் துருக்கியம் உட்பட 14 மொழிகளில் துணைத் தலைப்புகளுடனும் கிடைக்கிறது.
TVC கோப்புறையைக் காண்க (mp4)
தொழில்முறை மொழிபெயர்த்துரைத்தல், NAATI சான்றிதழ் மற்றும் பாதுகாப்பான பொது மருத்துவப் பயிற்சி
பொது மருத்துவர்களுக்கான ராயல் ஆஸ்திரேலியன் கல்லூரி (Royal Australian College of General Practitioners (RACGP)) உடன் இணைந்து NAATI-ஆல் உருவாக்கப்பட்ட இந்த நடைமுறை ஆதாரவளமானது, ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளைப் பேசும் அல்லது காது கேளாத அல்லது செவித்திறன் குறைந்த நோயாளிகளுடன் பணிபுரியும் பொது மருத்துவர்கள், மருத்துவப் பயிற்சி மேலாளர்கள், வரவேற்புப் பணியாளர்கள் மற்றும் பிற முதன்மை சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கு ஆதரவளிக்கிறது.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை எப்போது, எவ்வாறு பணியமர்த்துவது, கலந்தாலோசனைகளின் போது மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் திறம்படப் பணியாற்றுவது, முறைசாரா மொழிபெயர்த்துரைத்தல், இருமொழிப் பணியாளர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடனான தகவல் தொடர்பு போன்றவற்றால் ஏற்படும் அபாயங்கள், NAATI சான்றிதழ் மற்றும் தர உறுதிப்பாடு, மற்றும் மொழிபெயர்த்துரைக்கப்பட்ட கலந்தாலோசனைகளுக்கான கட்டணம் வசூலித்தல் ஆகியவை குறித்த வழிகாட்டுதலை இது வழங்குகிறது.
ஆதாரவளத்தைப் பதிவிறக்கம் செய்யவும் (PDF 3.8MB) ஆதாரவளத்தைப் பதிவிறக்கம் செய்யவும் (Doc 2.8MB)
மொழிபெயர்த்துரைப்பாளர் அடையாள அட்டை
மொழி ஆதரவு தேவைப்படும்போது மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரைக் கேட்பதற்கு மக்களுக்கு உதவும் வகையில் NAATI ஓர் எளிய அட்டையை உருவாக்கியுள்ளது. மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவை என்பதைத் தெரிவிக்க, இந்த அட்டையை சேவை வழங்குநரிடம் காட்டலாம்.
தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரைப் பணியமர்த்துவது, முக்கியமான தகவல்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய உதவுகிறது. NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள், தேசிய தரநிலைகளின்படி பணியாற்றும் தகுதிவாய்ந்த தொழில் வல்லுநர்கள் ஆவர். மேலும் அவர்கள் துல்லியம், இரகசியத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை ஆகியவற்றில் உறுதியாக உள்ளனர்.
ஆதாரவளத்தைப் பதிவிறக்கம் செய்யவும் (PDF 3.6MB)
காத்திருப்பு அறை சுவரொட்டி
இந்த சுவரொட்டியைப் பொது மருத்துவர் மருத்துவ நிலையங்கள் அல்லது இலவச மொழிபெயர்த்துரைத்தல் சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளின் நோயாளி காத்திருக்கும் அறைகளில் காட்சிப்படுத்தலாம். இது நோயாளிகளை மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரைக் கோருவதற்கு ஊக்குவிக்கும். LanguageLoop மற்றும் AUSIT உடன் இணைந்து NAATI உருவாக்கிய இந்த சுவரொட்டி, சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. மேலும், மொழிபெயர்த்துரைத்தல் சேவைகள் இரகசியமானவை மற்றும் தொழில்முறை சார்ந்தவை என்று நோயாளிகளுக்கு உறுதியளிக்கிறது.
பாதுகாப்பு, தகவலறிந்த முடிவெடுத்தல் மற்றும் தரமான சிகிச்சை ஆகியவற்றுக்கு நோயாளிகளுக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையே தெளிவான தகவல் பரிமாற்றம் அவசியமாகும்.
*’இது இலவசம்’ என்ற குறிப்பு இல்லாத இந்த சுவரொட்டியின் ஒரு பதிப்பு, கீழே பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளிலும் கிடைக்கிறது. ஒரு பிரதியைக் கோர, communications@naati.com.au என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.